Friday, August 04, 2023

மனைவி வசந்தாவின் நம்பிக்கை


மனைவி வசந்தாவின் நம்பிக்கை!


ஒவ்வொருவர் நலனுக்கும் 9 முறை படிக்கின்றாள்!


சீரடி சாய்பாபா வாழ்க்கை வரலாறை

ஊரறிய ஒன்பான் முறைதான் படிக்கின்றாள்!

பேரன்கள் வாழ்வில் குடும்பத்தார் வாழ்விலே

மாற்றங்கள் உண்டாக நம்பி படிக்கின்றாள்!

ஊற்றெடுக்கும் நம்பிக்கை தான்.


சாய்பாபா வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை

பார்த்தே விரித்திருப்பாள்! அப்பக்கம் வந்திருக்கும் 

வாசகத்தைப் பார்த்துப் படிப்பாள்! தனக்காக

நேசமுடன் பாபா அறிவுறுத்தும் நம்பிக்கை

வாசகத்தில் ஆறுதல் கொள்வாள் மகிழ்ந்திடுவாள்!

நாளும் படிக்கின்றாள் பார்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home