பெற்றோர்க்கு அழகு!
குழந்தைகளைப் பெற்றோர் பராமரிக்கும் நேரம்
செலவுகள் செய்வோம்! நகர்ந்திடும் வாழ்க்கை!
குழந்தைகள் நம்மைப் பராமரிக்கும் போது
குறிப்பறிந்து தேவைகளை நாளும் குறைத்தே
நமது செலவைத் தவிர்த்தே மகிழ்ந்து
உறுதுணை யாகத்தான் வாழ்வதே பெற்றோர்க்
கழகாகும் இங்கே உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home