மதுரை நினைவலைகள்
மதுரை நினைவலைகள்!
1963--மோதிலால் முதல் தெரு!
செட்டியார் வீடு!
தாசும்--நானும்!
நீளமான வீட்டில் முதல்மூன்று கட்டுகள்
தாண்டி அடுக்களை! அங்கே இடையிலே
வானம் தெரிய திறந்திருக்கும் காட்சிதான்!
வான்மழை பெய்தால் பொழிவு!
மழைபெய்யும் அந்த மழையிலே நானும்
உறவினராம் தாசும் நனைவோம்! குளிப்போம்!
உரத்த குரலிலே அம்மா வசவு!
இருவரும் பார்ப்போம் சிரித்து.
வாங்கடா உள்ளே! சளிபிடிக்கும் என்றேதான்
ஏகமாய் எங்களைச் சாடி அழைத்திருப்பார்!
ஆகாகா! அக்காலம் என்றுவரும்? ஏங்குகிறோம்!
போனது போனது தான்.
மதுரை பாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home