66/76
தந்தை 66 மகனோ 76 தொடர்ச்சி!
அறுபத்து ஆறு வயதினில் தந்தை
இறந்துவிட்டார்! நானோ எழுபத்து ஆறில்
நடந்துகொண்டு வாழும் உளைச்சலில் வாழ்வு!
இறப்பதற்குள் தீர்ந்தால் சரி.
வீட்டுக்கு வீடிங்கே வாசல் படியுண்டு!
வாசலில் என்வீட்டில் உள்ளதோ அப்பப்பா!
நாலடி வைத்தால் சறுக்கிவிடும் ஏழடிதான்!
காலமே உன்முடிவைக் கூறு.
மதுரை பாபாராஜ்
_தன் அனுபவங் கூறல்._
_என் மனங் கனக்கிறது._
கணியன் கிருஷ்ணன் தென்காசி
இடுக்கண்கள் எதுவந்தாலும்
அடுக்கியே அலையாய்
வந்தாலும்
தடுத்திடும் ஆற்றலை
தேக்கி வைத்திருக்கும்
மதுரகவியே
மடையை திறந்து
மண்டையில் போடுங்கள்!
இமயவரம்பன் கோ.
நல்லது நடக்கும்
நல்லதே நடக்கும்
எல்லாம் நன்மைக்கே
🙏🏻🤝🤍🤝🙏🏻
முருகு மதுரை
0 Comments:
Post a Comment
<< Home