Saturday, February 15, 2025

தமிழே சொல்வாயா?


 ஐயா,
 இரண்டு பாக்களுமே வெகு அழகாக இருக்கின்றன. இன்றும் பொருத்தம் ஆகின்ற விந்தையை, வெளிச்சத்தில் எடுத்து வைத்து உணரச் செய்யும் தங்களுக்கு இனிய வணக்கம்!

குறிப்பாக , தமிழே! சொல்வாயா? என்ற பாடலில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. கருத்தும் சந்தமும், எதுகையும் மோனையும் இழுத்து என்னைக் காதலிக்கின்றன.

நிறை வரியில், வளர்தமிழே! என்ற சொல் கற்கண்டாய் இனித்திடக் காண்கிறேன். மயங்கி விட்டேன்.

தங்களின் கவிதைகள், மாணிக்க மலர்கள் அன்றோ?
மகிழ்ச்சி

செ.வ.இராமாநுசன்

0 Comments:

Post a Comment

<< Home