அருமைத் தம்பி பாலாஜி அனுப்பியதற்குக் கவிதை!
பழங்கள் இரண்டும் வளர்வதோ நாளும்
கிளையொன்றில் என்றாலும் ஒன்று
கனியும்!
ஒருபழம் காத்திருக்கும் நேரத்திற் காக!
ஒருவரின் வெற்றியோ நம்முடைய தோல்வி
எனநினைக் காதே! இயற்கையின் செய்தி!
நமக்கும் கனிந்துவரும் வெற்றி! பொறுப்போம்!
நமக்குமிங்கே வாழ்வுண்டு சொல்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home