வீண்!
இருக்கும் பொழுதே மதி!
இருக்கும் பொழுது கொடுமைகள் செய்து
பெருக்கெடுக்கும் கண்ணீரில் தத்தளிக்க வைத்து
செருக்குடன் சாடித் துடிதுடிக்க வைத்து
உருக்குலைத்தார் வாழ்விலே அன்று!
நினைவுநாள் என்ன? அமாவாசை என்ன?
மனையில் விருந்தென்ன? பூசைகள் என்ன?
அவர்வந்தா உண்பார்? படையல்கள் எல்லாம்
மனதாற உண்பார் மனையிலே இன்று!
அனைத்துமே தன்னலந் தான்.
இருக்கும் பொழுதில் மதித்துப் பழகு!
இறந்தபின் செய்வதெல்லாம் வீண்.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home