Tuesday, October 28, 2025

இராமாநுசனின் நன்றி

 [29/10, 07:46] Vovramanujan:

 *எண்ணுகிறேன்! எழுதுகிறேன்! இயம்புகிறேன்!!*

(நற்றமிழ் செ.வ.இராமாநுசன்)

நாள்: 29-10-2025.

                -1-

   வணக்கம்! கடந்த 11-10-2025 முதல் நேற்று 28-10-2025 வரையிலும் அடியேன் சென்னை, அகில இந்திய வானொலி நிலைய ஒலிபரப்பில் 'தமிழமுதம்' தலைப்பின் கீழ் தமிழ் மொழியின் தீஞ்சுவைப் பகுதிகளைப் பேசி வந்தேன்.

   ஒவ்வொரு நாளும் நேரலையில் அல்லது அடியேன் பதிவு செய்து அனுப்பி வைத்த ஒலிக்கோப்பில் செவிமடுத்த நந்தம் சான்றோர்கள், நற்கருத்துதனை வழங்கி ஊக்குவித்தனர். சிலர் ஐயங்களையும் தொடுத்து சிந்திக்கத் தூண்டினர்.

   அடியேனின் உறவினர், நண்பர்கள் மற்றும் முகம் அறியா பொது நிலையாளர்கள் எனப் பெரும்பான்மையினர் கருத்துரைத்தனர்.

   அனைவருக்கும் மற்றும் சென்னை வானொலி நிலையத்தார்க்கும் அடியேனின் அன்பு கலந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

[29/10, 07:54] Madurai Babaraj: 🙏

நாளும் தமிழமுதம் நன்கு பருகிவந்தோம்!

தாள்பணிந்து நம்தமிழைப் போற்றி

 வணங்கினோம்!

(இ)ராமா நுசனாரின் நற்றமிழ்ப்

 பெட்டகத்தின்

காவிய சிந்தனைக்கு நன்றி

 நவில்கின்றோம்!

தூவினார் நற்கருத்தைத் தான்.

மதுரை பாபாராஜ்

[29/10, 08:39] Vovramanujan: 

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைவும்

 நன்றியும் ஐயா!

வணக்கம்

[29/10, 09:05] Madurai Babaraj: 

ChatGPT

Daily we drank the nectar of Tamil divine,

Bowed to her feet — our Mother sublime!

To Ramajunan’s chest of verse we bend,

Thanking the thoughts his muse did send —

For noble gems of truth he penned.

0 Comments:

Post a Comment

<< Home