Sunday, December 21, 2025

திங்கள்-ஞாயிறு


 BSNL  திரு.இராமசாமி அனுப்பிய

 ஒவ்வொரு கிழமைக்கும் கவிதை!

திங்கட்கிழமை!

திங்கட் கிழமை திருப்பு முனையாகும்

நம்பிக்கை உண்டென்று வாழ்த்து.


செவ்வாய்க் கிழமை!

செவ்வாய்க் கிழமை செழிப்பாக

 மாறட்டும்!

உள்ளம் மகிழட்டும் வாழ்த்து.


புதன்கிழமை!

புதன்கிழமை தன்னிலே புத்துணர்ச்சி

 கொண்டு

சிறப்பான நாளாக்கு வோம்.


வியாழக் கிழமை!

வியாழக் கிழமை விவேகம் பெருகி

நியாயங்கள் வெல்லவேண்டும் இங்கு.


வெள்ளி!

வெள்ளிக் கிழமை விரைவிலே

 வெற்றியைத்

தந்தே மகிழ்வதற்கு வாழ்த்து.


சனிக்கிழமை!

சனிக்கிழமை துன்பம் விலகியே இன்பம்

மனையில் தவழ்வதற்கு வாழ்த்து.


ஞாயிறு!

ஞாயிறு தன்னலம் நீக்கிப் பொதுநலம் 

வாழ்வில் மலரவைக்க வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

வாழ்க்கை முழுவதும் கவிதைகளுக்கு அர்ப்பணித்த தனிப் பிறவி சார் தாங்கள். தலை வணங்குகிறேன்

🙏

BSNL இராமசாமி

0 Comments:

Post a Comment

<< Home