குறுந்தொகை 1
குறுந்தொகை
பாடல் 1 - தீப்புத் தேளார்
குருதிப் பூ --
செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பிற் செங்கோட்டு யானைக்
கழல் தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே
----------------------------------------------------------------
பூவை, தலைவன் தலைவிக்குத் தோழியிடம்
ஆவலுடன் தந்தான்! அவள்மறுத்தே உரைக்கின்றாள்:
போர்க்களம் கண்டே அவுணரைக் கொன்றவனும்
வேர்ப்பகயை வீழ்த்திக் குருதிக் கறைகளால்
வேழம் சிவப்புற்ற கோட்டினைக் கொண்டிருக்கும்
போர்க்களிறை, வீர வலையத்தை கொண்ட வனும்
ஆள்கின்ற வேல்முருகன் குன்றமிது! செவ்வண்ணம்
பார்க்கக் குருதிப்பூ என்றேதான் எண்ணவைக்கும்
கோலத்தில் பூத்துக் குலுங்குகின்ற செங்காந்தள்
பூநிறைந்த ஊரிது பார்.

0 Comments:
Post a Comment
<< Home