Wednesday, March 25, 2026

கல்லாமை -- 41

 கல்லாமை -- 41

----------------------------------------------------------------

நூல்களையே கற்காமல் கற்றறிந்தோர் அவையினிலே

கல்லாதோர் பேசுவது ஆடுகளம் இல்லாமல்

சூதாட்டம் ஆடுகின்ற பேராசை போலத்தான்!

கற்றவர்கள் முன்னிங்கே கல்லாதோர் பேசுவது

பண்பற்ற நெஞ்சத்தில் வேடமிடும் பண்பாகும்!

படித்தவர்கள் முன்னிலையில் பேசாமல் இருப்பவர்கள்

படிக்காதோர் என்றாலும் உலகத்தில் நல்லவரே!

கல்லாதோர் கருத்துக்கள் நன்றாக இருந்தாலும்

கற்றறிந்தோர் முன்வந்து ஏற்பதற்கு மறுத்திடுவார்!

நடையுடை பாவனைகள் கற்றவர்போல் இருந்தாலும் 

கற்ரவர்கள் முன்னாலே பேசுகின்ற நேரத்தில்

வேடங்கள் கலைந்தேதான் உண்மையைக் காட்டிவிடும்!

கல்லாதோர் உயிரோடு இருக்கின்றார் என்பதன்றி

பயனின்றி வாழ்வதாலே களர்நிலம் போலாவார்!

அறிவற்ற அசடனின் அழகெல்லாம் கவர்ச்சியான

மண்பொம்மை அழகென்றே எல்லோரும் கருதிடுவார்!

கற்றவரின் வறுமையைக் காட்டிலும் துன்பத்தைக்

கல்லாதோர் வைத்திருக்கும் செல்வங்கள் தந்துவிடும்!


மதுரை பாபாராஜ்





0 Comments:

Post a Comment

<< Home