Saturday, March 28, 2026

சிலம்புக்குறள்

 சிலம்புக்குறள்

கண்ணகியின் கனவு

கனவொன்று கண்டேன்நான்! என்கணவன் வந்தே

எனையழைத்துச் சென்றான் நகர்க்கு.


கணவரின் மீது பழிசுமத்தி தீங்கின்

அனல்பட வைத்த தரசு.


மனக்கனவு எல்லாம் உரைத்திட மாட்டேன்

எனச்சொல்லி நின்றாள் உரைத்து.


கோவலன் நின்றான் கடைவாநில் பக்கம்!

ஆவலுடன் சென்றான் நுழைந்து.


செல்வத்தை எல்லாம் தொலைத்தேன்! வறுமையில்

உள்ளேன்! தலைகுனிந்தான் நின்று.


கண்ணகி கோவலனைப் பார்த்தாள்! சிலம்புகள்

உண்டே எனச்சொன்னாள் பார்த்து.


மதுரைக்குச் செல்வோம் புறப்படு நீதான்!

தொடுத்தான் புறப்பட்டாள் அங்கு.


சிலம்புக் குறள்


 நாடுகாண் காதை


இருவரும் மாளிகை விட்டே விடியல்

பொழுதிலே சென்றார் நடந்து.


புகாரை விட்டே நீங்குதல்


திருமாலின் கோயில்,அரசமரம், மற்றும்

அரங்குகள் ஏழைக் கடந்து


அருகப் பெருமானின் கோயில்,

மிளிரும்

சிலாவட்ட மேடை கடந்து


பெரும்புகழ் பாடும் புகார்நகர் விட்டே

இருவரும் சென்றார் இணைந்து.






கவுந்தி அடிகள் சந்திப்பு


நடந்து களைப்புற்ற கண்ணகி பார்த்தாள்!

அகத்திலே அன்புடன் பார்த்து


அன்பரே! மாமதுரை எவ்வளவு தூரம்?

என்றே வினவினாள் பார்.


"முப்பது காததூரம்"கோவலன் சொல்லித்தான்

உற்றவளைப் பார்த்தான்  சிரித்து.


கவுந்தி அடிகளைக் கண்டு வணங்கித்

தொழுதெழுந்தான் கண்ணகி யோடு.


மதுரைக்குச் செல்கின்றீர் நானும்

துணையாய்

மதுரை வருகின்றேன் என்று


கவுந்தி அடிகள் உரைத்ததும் உள்ளப்

பெருக்குடன் நின்றார் மகிழ்ந்து.


போகும் வழியெல்லாம் துன்பத்தின் வேதனைகள்

கூடுகட்டிக் காத்திருக்கும் பார்.


எல்லாம் உரைத்தார் கவுந்தி அடிகள்தான்!

மெள்ள நகர்ந்தார் நடந்து.


 சாரணர் வந்தே அருகப் பெருமானின்

பேரருளைச் சொன்னார் உவந்து.


கவுந்தி அடிகள் வணங்கிப் புகழந்தார்!

அருளெண்ணி சென்றார் தொடர்ந்து.


தரந்தாழ்ந்த தீயோர்கள் எள்ளிநகை யாட

அவர்களை காட்டு நரியாய்


உலவச் சபித்தார் கவுந்தி அடிகள்!

உலவினர் ஊளையிட்டு் தான்.


யானையை வென்ற கோழிபெயர் ஏந்துகின்ற

தேனூர் துறையூர்க்கு வந்து


தொடர்ந்தார் பயணத்தை! பூம்புகார்க் காண்டம்

நிறைவுற்ற கோலமிது கூறு.

மதுரைக் காண்டம் 1


உறையூரை நீங்கி விடியற் பொழுதில்

நடைபயின்றார் மூவர் விரைந்து.


மண்டபம் ஒன்றில் மறையோனைக் கண்டனர்!

தங்கினர் ஓய்வெடுக்கத் தான்.


பாண்டிய மன்னனின் வீரப் புகழ்சொல்லி

வாழ்த்தினான் சான்றோன் மகிழ்ந்து.


வேனிற் பருவத்தில்  காரிகையைக் காட்டுவழி

ஏனோ அழைத்துவந்தாய்? கூறு.


நீண்டதொரு பாலை கடந்தால் 

வழிமூன்று

காண்பாய்! வலப்புறம் செல்.


எயினர் குடியிருப்பும் ஐவனமும் தாண்டி

எழிலாய் சிறுமலை காண்.


அங்கே வலப்புறம் சென்றால் மதுரைநகர்

சென்றடைவாய் நீயே! உணர்.


இடப்புறம் சென்றால் இயக்கமாது தோன்றி

விடைகேட்பாள்! கூறவில்லை என்றால்


பொய்கைகள் மூன்றின் கரைகாட்டி சென்றிடுவாள்

தொய்வின்றிப் போகலாம் நீ.


நடுவழியில் சென்றால் காடுகள் காண்பாய்!

நெடும்பயணம் செல்கவே நீ.


கவுந்தி அடிகள் நெடிய வழியில் 

கருத்துடன் செல்கின்றோம் நாம்.


சொன்னதும் சான்றோன் விடைபெற்றுச்  சென்றுவிட்டான்!

அங்கே நகர்ந்தார் நடந்து.


0 Comments:

Post a Comment

<< Home