Saturday, March 28, 2026

சிலம்புக்குறள்

 சிலம்புக்குறள்


வைகை ஆறு

வைகை வடகரை சேர்ந்தனர் மூவரும்!

பொய்யாக் குலக்கொடி அஃது.


கண்ணகிக்குத் துன்பம் விளையும் எனக்கருதி

கண்கவரும் பூக்களால் தன்னை


மற்றவர்கள் காணாத வண்ணம் உள்ளடக்கி

அப்போது பார்த்தாள் நடித்து.


நீர்நிறைந்த ஆறில்லை பூநிறைந்த ஆறாகும்

கூறி வணங்கினார் சேர்ந்து.


மரப்புணையில் ஏறித்தான்  தென்கரைக்குச் சென்றார்!


அகழிதன்னைச் சுற்றித்தான் சென்றனர்! பூக்கள்

அகம்நடுங்கப் பார்த்தன அங்கு.


மதில்கொடிகள் காற்றில் அசைவதோ நீங்கள்

மதுரை வராதீர்கள் என்று


கரமசைத்துக் காட்டுதல்போல் அங்கே அசைந்து

பறந்ததாய்ச் சொல்கிறது பா.


மூதூர்ப் புறஞ்சேரி தன்னை அடைந்தனர்

மூவரும் நாடித்தான் வந்து.


ஊர்காண் காதை


ஞாயிறின் செங்கதிர்கள் மாமதுரை மூதூரைத்

தூவி எழுப்பியது காண்.


கோயில் முரசுகள்  மங்கல வாழ்த்திசைக்க

கோயில் நகரழகைப் பார்.


கவுந்தி அடிகளிடம் கண்ணகியைச் சேர்த்தான்!

பெருவணிகர் தன்னை நகரில்


அறிமுக மாவதற்குக் கோவலன்

சென்றான்!

கடிந்துகொண்டான் தன்னை நிலைக்கு.




மாநகர்க் காட்சிகள்


பொதுமகளிர் வைகை நதிப் புனலில்

புதுப்புனல் ஆடினர் சூழ்ந்து.


அந்திப் பொழுதில்  மலர்ப்படுக்கை மீதிலே

தங்களது காதலர் பார்க்க


கார்காலம் போன்று வரும் பலகாலம்

பார்ப்பதற்கே இன்புற்றார் பார்.


ஊடல் முடிந்ததும்  கூடல் தொடர்வதற்கு

நாடுகின்ற செல்வந்த ரோடு


அரசரும் நாடி வரும்புகின்ற காமக்

கிழத்திகளில் சென்றிருந்தான் பார்த்து.


பலபொருள்கள் விற்கின்ற அங்காடி வீதி

வலம்வந்தான் கோவலன் பார்த்து.


மதுரையைப் பார்த்தான்! கொடுகள் அசையும்

மதிற்புறம் வந்தான் மீண்டு.


அடைக்கலக்காதை


கோவலன் கணிப்பு


செங்கோல் வழுவாது அருளாட்சி செய்கின்ற

வண்டமிழ்ப் பாண்டியன் நாடு.


மக்கள் செல்வச் செழிப்பிலே வாழ்கின்றார்!

 விளக்கினான் வந்து.


மாடலன் வந்தான்! கோவலன் ஆசிகளை

நாட வணங்கிணான் அங்கு.


கோவலனைக் கேட்டறிந்தான்! மாடலன்

ஆவலுடன் பேசினான் கேட்டு.


ஆயிரத் தெட்டுக் கழஞ்சுபொன்னை மாதவிக்கு

காவியமாய்த் தந்தான்பார் வேந்து.


மாதவி ஈன்றெடுக்கும் பெண்குழந்தைக் கென்னபெயர்

சூடலாம் என்றதும் நீயும்


வரலாற்றைச் சொல்லி மண்மேக லையே

பெயராக வைப்போமென் றாய்.


மாதவி பெண்குழந்தை பெற்றெடுத்தாள்! ஆயிரம்

மாதர்கள் சூழ்ந்தேதான் நின்று


மணிமே கலையென்றே வாழ்த்தி மகிழ்ந்தார்!

இனிமையாய்க் கொஞ்சினாள் தாய்.


அப்போது கோலூன்றி வந்த மறையோனோ

அக்கறையாய் வந்தான் தவித்து.


தானம்தா என்றேதான் கேட்டுநின்றான் கோவலனே!

யானையொன்று்சீறிவந்த தங்கு.


மறையோனை யானை துதிக்கையால் பற்ற

நடைபோட்டாய் வீரமுடன் நீ.


யானையுடன் போரிட்டே அந்த மறையோனை

வீரமுடன் காத்தாய் உவந்து.


தானங்கள் வீரத்தைக் கோவலன் செய்ததை

போற்றிப் புகழ்ந்திருந்தான் அங்கு.


பண்டை வினைப்பயனே கண்ணகி யோடுவந்தாய்!

சொன்னான் மாடலன் நின்று.


அடைக்கலக்காதை

நிறைவு


0 Comments:

Post a Comment

<< Home