காலைப்பொழுதில் கவிதை எழுத பட்டபாடு
கவிதை எழுத காலைப் பொழுதில் அவசர மாக அமர்ந்தேன் --கவிதைக் கருப்பொருளைச் சிந்தித்து காத்திருந்தேன்! சுரந்தது சோதனைதான் சூழ்ந்து.
அழைப்பு மணியை அடித்தார் ஒருவர்!
விழைவுடன் சென்றே வினவ -- வளமான
கீரை கொணர்ந்தேன்!கேளய்யா அம்மாவை!
பார்த்தேன்!முறைத்தேன்!பணிந்து.
அரைக்கீரை வாங்கியதும் அன்புடனே சென்றாள்!
பரபரப்பாய் உட்கார்ந்து பார்த்தேன் -- அரைநொடியில்
"அம்மா" குரல்கேட்டேன்! அங்கே சலவையாளர்
நின்றார் துணியுடனே நேர்ந்து.
துணிவாங்கி வைத்துவிட்டு துள்ளித்தான் வந்தேன்!
மணியடித்த சத்தத்தால் வாசல் -- தனையளந்தேன்
தண்ணீரை விற்பவரோ தானே சிரித்திருந்தார்!
வெந்நீராய்க் கொந்தளித்தேன் வெந்து.
தண்ணீரைத் தந்தவரும் தன்வழியே சென்றுவிட்டார்!
இன்னுமென்ன என்றே எழுதவந்தேன் -- அங்கேயோ
வாசலிலே பால்காரர் வந்தே மணியடித்தார்!
காசெடுக்கச் சென்றேன் கடிந்து.
அடுத்தடுத்து இவ்வாறு அன்பாகத் தொல்லை
படையெடுக்கும் காலைநேரம் பாவம் -- உடைப்பெடுத்தா
ஓடும் கவிதைகள்? உள்ளம் கலங்கிடவே
மூடினேன் பேனாவை!மூச்.
(எனது மகரயாழ் கவிதைத்தொகுப்பு நூலில் இருந்து)
நண்பர் எழில் புத்தன் கருத்து
அதிகாலை
அனைவரோடும்
தாங்கள்
ஆற்றும்
அன்புரை…
அவர்களுக்கு
கொடுக்கும்
ஊக்கம்…
அவர்களிடமிருந்து
நாம் பயிலும்
பாடங்கள்…
அனைத்தையும்
அழகாய்
அலங்கரித்து
விட்டீர்கள்
அய்யா…
மனமார்ந்த நன்றிகள்!!!
1 Comments:
very nice and simple .
thanks
cms
3:27 AM
Post a Comment
<< Home