Friday, January 26, 2007

பாவேந்தரைப் போற்றுவோம்

முடைநாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கம்
தடைக்கல்லே என்றேதான் சாடி-- படையெடுக்கும்
பாக்களைப் பாடினார் பாவேந்தர்!இன்றளவும்
போற்றுகின்றோம் வாழ்வில் புரிந்து.

2 Comments:

Blogger மாசிலா said...

அதென்னவோ தெரியலீங்க,
'பாவேந்தர்'னு அந்த வார்த்தைய கேட்டாலே மயிர் கண்ணெனெல்லாம் சிலிர்க்குதுங்களே!
நரம்பெல்லாம் புடைக்குதே! ஏன்?
உடம்புல திமிரு வேற ஏறுதே.

உங்கள் கவிதையில் வேகம் இருக்கிறது.
விவேகமும் கூட.

பகிர்ந்தமைக்கு நன்றி.

(நம்ம ஊரும், பாவேந்தர் ஊரேதான்.
ஹி! ஹி!)

8:24 AM

 
Blogger மாசிலா said...

இப்பத்தான் உங்க வலைப்பூவை முதல்முதல பார்த்தேனுங்க
ஏனைய்யா, உங்களுக்கு எங்கள மாதிரி சாதாரண தமிழு எழுத வராதுங்களா?
சீக்கிரம் கத்துங்க ஐயா.
சமயத்துல ஏதாவது கடுதாசி எழுத உதவும்கள...

ஒருசில கவிதைகளை மட்டும் படித்தேன். நன்றாகவே இருக்கிறது.

காந்திய பத்தின உங்க கருத்துக்கும் நமக்கும் கொஞ்சம் தாங்களுங்க!

நம்ம தமிழ் போராட்ட வீரர்களை பத்தி கொஞ்சம் பொரிச்சு தள்ளுங்களேன்!
இவங்கள பத்தி அறிஞ்சு, கவிதை எழுத தகுந்தமாதிரி உங்க மனச ஏற்பாடுசெய்ய இங்க போய் http://tamilarangam.blogspot.com/ கொஞ்சம் பாருங்க!
நன்றி!

9:07 AM

 

Post a Comment

<< Home