Monday, December 22, 2008

கவிதைச் செங்கோல்

காசுக் காக விற்கும் பொருளாய்க்
கவிதைச் செங்கோல் மாறுவதா?
வேசித் தனத்தை கற்பைக் காக்கும்
வேதம் என்றே கூறுவதா?
ஆசை வெறியால் புகழைத் தேடி
அலையும் பயணம் யாத்திரையா?
கூசச் செய்யும் குறுக்கு வழிகள்
கொள்கை நெஞ்சின் சூத்திரமா?

கவிதைப் போக்கில் புதுமைப் பெயரில்
காமக் கணைகள் வீசுகின்றார்!
செவிகள் நாணும் சொற்கள் கொண்டு
திரையில் பாடல் தொடுக்கின்றார்!
கவிஞன் என்றால் கொஞ்சிக் கெஞ்சிக்
காலைத் தொடுதல் முறையில்லை!
அவனித் தீயே எரித்த போதும்
அருமைக் கவிஞன் வளைவதில்லை!

மதுரை பாபாராஜ்
1997

0 Comments:

Post a Comment

<< Home