பணம் ! பணம் ! பணம்!
பணம் ! பணம் ! பணம்!
பணமே! பணமே! உன்னையார்
படைத்தது இந்த உலகத்தில்?
தினமும் உன்னை மனிதர்கள்
தேடித் தேடி அலைகின்றார்!
சிறுகச் சிறுகச் சேர்த்தாலும்
செலவைக் காட்டிப் பறிக்கின்றாய்!
நிறைய வந்தே குவிந்தாலும்
நிலையை மறக்கச் செய்கின்றாய்!
எனக்கு நீயோ உறவானால்
எல்லோ ருந்தான் வருகின்றார்!
எனக்கு நீயோ பகையானால்
எவரும் தேடி வருவதில்லை!
உழைத்தபோது நீ வந்தாய்!
உருண்டது வாழ்க்கை ஒருவாறாய்!
உழைப்பின் கால்கள் நின்றதுமே
உள்ளம் தவிக்கத் தொடங்கியதே!
பணமே உன்னால் படும்பாட்டை
பாவில் வடிக்க இயலாதே!
சுணங்க வைப்பதும் நீதானே!
துள்ளச் செய்வதும் நீதானே!
மதுரை பாபாராஜ்
2005
0 Comments:
Post a Comment
<< Home