Saturday, December 13, 2008

ஊனம்

தனிமையில் நடந்து வந்தேன்!
தாவித்தான் ஓடி வந்தான்!
துணிவுடன் திரும்பிப் பார்த்தேன் !
துள்ளித்தான் சிரித்து வந்தான்!

பனிமலர் என்றன் உள்ளம்
பதைத்தது இதனைக் கண்டு !
மணித்துளி தன்னில் அச்சம்
வளைத்தது நடுங்க லானேன்!

வந்தவன் அருகில் நின்றான்!
மனதினில் கலக்கத் தோடு
என்னவென் றேதான் கேட்டேன்!
ஏந்திழை என்னை நோக்கி
தந்தனன் பணப்பை தன்னை!
தன்னிதழ்த் திறவா ஊமை
வந்தவன் என்ற றிந்தேன்!
வணங்கியே நன்றி சொன்னேன்!

உடலினில் ஊனம் பெற்றும்
உதவிடும் உள்ளந் தன்னைக்
கடலெனக் கொண்டதாலே
கருத்தினில் உயர்ந்து விட்டான்!

சுடர்விடும் அழகி ருந்தும்
சுரந்திடும் சந்தே கத்தின்
தடந்தனைப் பெற்ற தாலே
தரணியில் எனேக்கே ஊனம்!

மதுரை பாபாராஜ்
1984

0 Comments:

Post a Comment

<< Home