பூபாளக்குவியல்
வழிமாறும்! மொழிமாறும்!
வரிமாறும்!விலைமாறும்!
விழிமாறும்! விரல்மாறும்!
வினைமாறும்! விடைமாறும்!
பழிமாறும்! பகைமாறும்!
பனிமாறும்! படைமாறும்!
மழைமாறும் ! மனைமாறும் !
மலைமாறும்! மடுமாறும்!
நதிமாறும்! நடைமாறும்!
நகைமாறும்! நிலைமாறும்!
விதிமாறும்! ஒளிமாறும்!
விசைமாறும்! திசைமாறும் !
கதிமாறும்! கருமாறும்!
கணைமாறும்! கலைமாறும்!
கதைமாறும்! கவிமாறும்!
கரைமாறும்! உரைமாறும்!
எதுமாறிக் குலைந்தாலும்
என்னவளின் நினைவுகளை
விதையேந்தும் நிலம்போல
விருப்பமுடன் சுமக்கின்ற
இதயத்தின் சுருதிமட்டும்
என்றென்றும் மாறாது !
புதையல்தான் !அவள்நினைவு
பூபாளக் குவியல்தான்!
மதுரை பாபாராஜ்
1989
0 Comments:
Post a Comment
<< Home