குழந்தைக்குக் குறளமுதம்!
குறள் 74:
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
அன்பைப் பற்றிச் சொல்லம்மா!
நட்பைக் குறித்துச் சொல்லம்மா!
பரபரப் பான அன்பினிலே
பக்குவத் தெளிவே இல்லையம்மா!
பக்குவ மற்ற நட்பினிலே
வக்கிரம் தானே ஊற்றெடுக்கும்
களங்க மற்ற அன்புடனே
கைகள் கோர்த்துப் பழகவேண்டும்!
அந்த அன்பே நிலைத்திருக்கும்!
மற்றவை எல்லாம் மறைந்துவிடும்!
நிலைத்த அன்பே கனிந்துவரும்!
கனியக் கனிய நட்புவரும்!
இந்தச் சிறப்பே வாழ்வினிலே
என்றும் மதிப்பை உருவாக்கும்!
துன்பந் தன்னில் ஒதுங்காமல்
துணையாய் நிற்பதே நட்பாகும்!
ஒதுங்கிச் சென்றால் நட்பில்லை!
அந்த நட்பில் உண்மையில்லை!
0 Comments:
Post a Comment
<< Home