குழந்தைக்குக் குறளமுதம்!
குறள் 75:
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
அம்மா அம்மா பாரேன்!
அந்த வீட்டைப் பாரேன்!
நாரு போட்ட கட்டில்தான்
நாலு பேரு உட்கார்ந்து
சிரிச்சுப் பேசி இருக்காங்க
தினமும் பாத்து ரசிக்கிறேன்!
குடிசை வீட்டில் இருந்தாலும்
கூடி வாழும் பண்பிருக்கே!
நமக்கு நிறைய இருந்தாலும்
இப்படிச் சிரிக்க முடியல!
ஏனம்மா ? என்னம்மா!
காரணத்தச் சொல்லம்மா!
அவர்க ளது உள்ளத்தில்
அன்பு நிறைய இருப்பதால்
இன்பமாக சிரிக்கின்றார்!
துன்பத்தை மறக்கின்றார்!
அன்பின்றி வாழ்பவர்கள்
துன்பத்தில் வாழ்கின்றார்!
அன்பை வளர்க்கக் கத்துக்கோ!
இன்பம் வளரும் புரிஞ்சுக்கோ!
என்னுடைய அம்மாதான்!
எனக்கு நல்ல அம்மாதான்!
குறள் 75:
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
அம்மா அம்மா பாரேன்!
அந்த வீட்டைப் பாரேன்!
நாரு போட்ட கட்டில்தான்
நாலு பேரு உட்கார்ந்து
சிரிச்சுப் பேசி இருக்காங்க
தினமும் பாத்து ரசிக்கிறேன்!
குடிசை வீட்டில் இருந்தாலும்
கூடி வாழும் பண்பிருக்கே!
நமக்கு நிறைய இருந்தாலும்
இப்படிச் சிரிக்க முடியல!
ஏனம்மா ? என்னம்மா!
காரணத்தச் சொல்லம்மா!
அவர்க ளது உள்ளத்தில்
அன்பு நிறைய இருப்பதால்
இன்பமாக சிரிக்கின்றார்!
துன்பத்தை மறக்கின்றார்!
அன்பின்றி வாழ்பவர்கள்
துன்பத்தில் வாழ்கின்றார்!
அன்பை வளர்க்கக் கத்துக்கோ!
இன்பம் வளரும் புரிஞ்சுக்கோ!
என்னுடைய அம்மாதான்!
எனக்கு நல்ல அம்மாதான்!
0 Comments:
Post a Comment
<< Home