Wednesday, November 13, 2019

அனைவருக்கும்  பொருந்தும்!

சலனமில்லாத மனம்

கடந்துவந்த பாதைச் சலனக் கவர்ச்சி
உடன்வந்தே வாழ்வை மயக்கிட வாழ்ந்தோம்!
சடக்கென்ற ஓய்விலே வாழ்க்கையின் காட்சி
மடமட வென்றே மாறிட நின்றோம்!
கடக்கவேண்டும் எந்தச் சலனமும் இன்றி!
கடப்போம் சலனமின்றி இங்கு.


பாதையில்லா பயணம்

எத்தனையோ பாதைகள் அங்கே பயணங்கள்!
அத்தனையும் சாதனை என்றே நினைத்திருந்தோம்!
சுற்றி எடைபோட்டுப் பார்த்தால்  பாதைகள்
வெற்றிடமாய் நீண்டிருக்க பாதையில்லா
காட்சியில்
வெற்றுப் பயணந்தான் வாழ்வு.

தடயமில்லா வாழ்வு!

 காலம் நகர்த்துகின்ற காய்களாக நாள்தோறும்
கோலமேந்தி வாழ்ந்திருந்தோம்! இன்பமும் துன்பமும்
காலச் சுழற்சியில்  மாறுமென்றே எண்ணாமல்
காலத் தடயத்தை விட்டுசெல்ல துள்ளுவோம்!
ஞாலம் தருகின்ற ஞானத்தில் தடயமின்றி
ஞாலவாழ்வை நாம்முடிக்க காலத்தைப்
பார்த்திருப்போம்!
கோலமும் வாழ்க்கையும் பொய்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home