Wednesday, January 01, 2020

குரோவ் வளாகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்!

31.12.2019

நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை!

தொகுப்பாளர்!

நிகழ்வைத் தொகுத்து வழங்கியவர் எல்லா
நிகழ்வையும் நேர்த்தியாக நேரமேலாண்
மையைக்
கடைப்பிடித்து நன்றாய் நடத்தினார்! வாழ்த்து!
நடத்திய ஆற்றலுக்கு வாழ்த்து.

பெண்கள் இசைக்குழு!

இயற்கை மழைவருமோ என்றே நினைத்தோம்!
இசைமழையைப் பெண்கள் குழுவினர் தந்தார்!
இயற்கை மழையங்கே மெய்மறந்து கேட்டு
வியந்ததைக் கண்டோம் மகிழ்ந்து.

குழந்தைகள் நடனம்!

தற்காலப் பாடலுக்கும்  பக்தி மணங்கமழும்
அக்காலப் பாடலுக்கும் நாட்டியம் ஆடினார்!
சுற்றிச் சுழன்றாடி எல்லாக் குழந்தைகளும்
அப்பப்பா ஆற்றலைக் காட்டிய ஆர்வமோ
அற்புதந்தான் பார்த்தோம் ரசித்து.

ஆங்கிலப் பாடல்கள் பாடினார்! வேடங்கள்
ஏந்தி நடன விருந்தளித்தார்! இப்படி
மாறிமாறி பன்முக ஆற்றல் நிகழ்வுகள்
தேடிவந்து ஊற்றியது தேன்.

உதவியாளர்கள்!

இந்த வளாகத்தை நன்கு  பராமரிக்க
தன்னலம் இல்லாமல் பாடுபடும் ஊழியரை
மேடைக்கு அழைத்தேதான் பாராட்டி வாழ்த்தினர்!
ஈடற்ற இப்பண்பை வாழ்த்து.

நிர்வாகிகள்!

இந்த வளாகத்தின் நிர்வாகம் நாள்தோறும்
எந்தக் குறைபாடும் இல்லாமல் தொண்டாற்றும்
தன்னலம் இல்லாத நிர்வாக மாந்தருக்கு
நன்றி நவின்றார் மகிழ்ந்து.

பொன்னாடை தந்தே மகிழ்வித்தார் ஊக்கமுடன்
தன்னார்வம் கொண்டே அனைவரும் முன்வந்தே
தொண்டாற்ற ஊக்கம் கொடுப்பதே நோக்கமாகும்!
இந்தக் குழுவுணர்வே நன்று.

உணவகம்!

கண்களுக்கும் மற்றும் செவிகளுக்கும் நல்விருந்தைத்
தந்தவர்கள் நல்ல சுவைமிகுந்த சிற்றுண்டி
தந்தே மகிழ்வித்தார்! எல்லோரும் வாழ்த்தினார்!
அன்பின் வெளிப்பாடே இஃது.

மேடை-- ஒலிபெருக்கி!

பரந்தமேடை நல்ல  ஒலிபெருக்கி இந்த
இரண்டும் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்க
வரமாக வந்தமையக் காரண மானவரை
உளமாற வாழ்த்துவோம் இங்கு.

மதுரை பாபாராஜ்








0 Comments:

Post a Comment

<< Home