செந்தமிழ்க் கல்லூரி மாணவர்கள்
அர்ச்சுணன்-- எழில்மாறன்-- முரளி
மூவருக்கும் வாழ்த்து!
பாரதி நூற்றாண்டில் போட்டியில் சந்தித்தேன்!
ஆர்வமுடன் நற்கூடல் பேரமைப்பை ஏற்படுத்த
தோள்கொடுத்து நின்றவர்கள்! தன்முனைப்பில் ஆர்வலர்கள்!
வாழ்கவென்றே வாழ்த்துகிறேன் இங்கு.
அர்ச்சுணன்!
நகைச்சுவைப் பேச்சு! புதுக்கவிதை ஆற்றல்!
நடையிலே அர்ச்சுணன் வில்வேகம் உண்டு!
நடையில் செயலில் பரபரப்பு! ஆக்கம்!
முறையாய்த் தமிழ்படித்த நண்பர்! முகத்தில் புன்னகை எப்பொழுதும் உண்டு!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.
பட்டிமன்றம் பாவரங்கம் பேச்சரங்கம் என்றேதான்
அத்தனை மேடையிலும் பங்கெடுப்பார்!
ஆற்றல்
முத்திரை தன்னைப் பதித்திடுவார் நாளும்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
த.எழில்மாறன்!
இலக்கிய ஆர்வம் படைத்தவர்! தந்தை
வழியிலே கூட்டுறவு நற்பணியில் சேர்ந்தே
வளமுடன் வாழ்வமைத்து வாழ்கின்ற மாறன்!
நலமுடன் வாழ்கபல் லாண்டு.
முரளி!
தெப்பக் குளம்பகுதி வாழ்பவர்! நல்லவர்!
எப்போதும் எங்கும் அமைதியாயத் தொண்டாற்றும்
நற்றமிழ் ஆர்வலர்! நற்கூடல் பேரமைப்பின்
உற்றதுணை யாய்நின்றார் அன்று.
மூவரும் முத்தமிழ்போல் வாழ்க மகிழ்ந்து!
மூவரையும் பார்த்தேதான் முப்பதாண்டு போயிருக்கும்,!
மூவரும் எங்கிருந்த போதிலும் வாழ்கவே!
மூவரும் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
அர்ச்சுணன்-- எழில்மாறன்-- முரளி
மூவருக்கும் வாழ்த்து!
பாரதி நூற்றாண்டில் போட்டியில் சந்தித்தேன்!
ஆர்வமுடன் நற்கூடல் பேரமைப்பை ஏற்படுத்த
தோள்கொடுத்து நின்றவர்கள்! தன்முனைப்பில் ஆர்வலர்கள்!
வாழ்கவென்றே வாழ்த்துகிறேன் இங்கு.
அர்ச்சுணன்!
நகைச்சுவைப் பேச்சு! புதுக்கவிதை ஆற்றல்!
நடையிலே அர்ச்சுணன் வில்வேகம் உண்டு!
நடையில் செயலில் பரபரப்பு! ஆக்கம்!
முறையாய்த் தமிழ்படித்த நண்பர்! முகத்தில் புன்னகை எப்பொழுதும் உண்டு!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.
பட்டிமன்றம் பாவரங்கம் பேச்சரங்கம் என்றேதான்
அத்தனை மேடையிலும் பங்கெடுப்பார்!
ஆற்றல்
முத்திரை தன்னைப் பதித்திடுவார் நாளும்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
த.எழில்மாறன்!
இலக்கிய ஆர்வம் படைத்தவர்! தந்தை
வழியிலே கூட்டுறவு நற்பணியில் சேர்ந்தே
வளமுடன் வாழ்வமைத்து வாழ்கின்ற மாறன்!
நலமுடன் வாழ்கபல் லாண்டு.
முரளி!
தெப்பக் குளம்பகுதி வாழ்பவர்! நல்லவர்!
எப்போதும் எங்கும் அமைதியாயத் தொண்டாற்றும்
நற்றமிழ் ஆர்வலர்! நற்கூடல் பேரமைப்பின்
உற்றதுணை யாய்நின்றார் அன்று.
மூவரும் முத்தமிழ்போல் வாழ்க மகிழ்ந்து!
மூவரையும் பார்த்தேதான் முப்பதாண்டு போயிருக்கும்,!
மூவரும் எங்கிருந்த போதிலும் வாழ்கவே!
மூவரும் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home