Friday, May 29, 2020

கொரோனா பாதுகாப்புக் கவசம்!

(கந்தசட்டிக் கவசம் ராகம்)

களப்பணி யாற்றும் வீரர்க ளுக்கும்
கடமை ஆற்றும் காவலர் களுக்கும்
உயிரைக் காக்கும் மருத்துவர் களுக்கும்
உதவிகள் செய்யும் செவிலியர் களுக்கும்
வணக்கம் சொல்வோம் வணக்கம் சொல்வோம்
நன்றிகள்  சொல்வோம் நன்றிகள் சொல்வோம்!

விதிகளை மதித்தே நடப்பது கடமை
விதிகளை மீறி செல்வது மடமை
முகத்தில் கவசம் அணிந்திட வேண்டும்
கைகளில் உறைகள் அணிந்திட வேண்டும்
கைகளை நன்கு கழுவிட வேண்டும்
மூன்றடி தள்ளி நின்றிட வேண்டும்


தொட்டுப் பேசுதல் தவிர்த்திட வேண்டும்
அருகில் நிற்பதை தவிர்த்திடல் வேண்டும்
கைகளைக் கொடுப்பதை தவிர்த்திட வேண்டும்
வணக்கம் சொல்வதைப் பழகிட வேண்டும்

வாரம் ஒருமுறை பொருள்களை வாங்கு
அடிக்கடி வெளியே செல்வதைத் தவிர்ப்போம்
வெளியே சென்று திரும்பியே வந்தால்
ஆடையை நனைத்துத் துவைத்திட வேண்டும்
வெந்நீர் தன்னில் குளித்திட வேண்டும்
சுடச்சுட வெந்நீர் குடித்திட வேண்டும்

இப்படி வாழ்ந்தால் கொரோனா தொற்றாது
இல்லையேல் நம்மைக் கொரோனா
தொற்றுமே
அரசின் விதிகளை அனுதினம் மதிப்போம்
கொரோனா தொற்றை விலக்கியே வாழ்வோம்

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home