Sunday, May 24, 2020

கொரோனா ஆத்திச்சூடி!

அன்பைக் காட்ட தழுவாதே

ஆறடி தள்ளி விழித்திரு

இல்லத் திற்குள் தனித்திரு

ஈவதைத் தொடாமல் கொடுத்திடு

உலவா தேநீ ஊருக்குள்

ஊர டங்கைப் பின்பற்று

எச்சில் பழக்கம் கைவிடு

ஏழையின் பசியைப் போக்கிடு

ஐவ ரோடு நிற்காதே

ஒருவரை யொருவர் தொடாதே

ஓய்வை எண்ணிக் கலங்காதே

ஔடதம் தவிர்ப்பது தீதாகும்

எஃகைப் போல உறுதிகொள்.
கொரோனா தொற்றைத் தவிர்த்திடலாம்!

மதுரை பாபாராஜ்


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home