புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!
ஊரடங்கு ஒன்றைச் செய்தியாகப் பார்த்தனர்!
ஊரடங்கு ரெண்டை அமர்ந்தேதான்
பார்த்தனர்!
ஊரடங்கு மூன்றில் நகரத் தொடங்கினர்!
ஊரடங்கு நான்கில் திரளத் தொடங்கினர்!
ஊரடங்கால் வேலை இழந்து வருமானம்
தானிழந்தே அல்லலுடன் ஆற்றாமை சேர்ந்தழுத்த
ஊனின்றி செய்வ தறியாமல் தவித்தனர்!
மூட்டை முடிச்சுடன் நாளும் நடைப்பயணம்
ஊர்நோக்கி செல்கின்ற காட்சிகள் நாட்டிலே!
ஆங்காங்கே மாநிலத்தை ஆளும் அரசுகள்
கேடயமாய் மாறிப் பயணத்தைப் பேருந்து
மூலம் தொடர்வண்டி மூலம் ஏற்பாடு
ஊர்நோக்கிச் செல்லவைக்கும் காட்சி அரங்கேற்றம்!
ஊர்கூடித் தேரிழுக்கும் தொண்டு.
மதுரை பாபாராஜ்
ஊரடங்கு ஒன்றைச் செய்தியாகப் பார்த்தனர்!
ஊரடங்கு ரெண்டை அமர்ந்தேதான்
பார்த்தனர்!
ஊரடங்கு மூன்றில் நகரத் தொடங்கினர்!
ஊரடங்கு நான்கில் திரளத் தொடங்கினர்!
ஊரடங்கால் வேலை இழந்து வருமானம்
தானிழந்தே அல்லலுடன் ஆற்றாமை சேர்ந்தழுத்த
ஊனின்றி செய்வ தறியாமல் தவித்தனர்!
மூட்டை முடிச்சுடன் நாளும் நடைப்பயணம்
ஊர்நோக்கி செல்கின்ற காட்சிகள் நாட்டிலே!
ஆங்காங்கே மாநிலத்தை ஆளும் அரசுகள்
கேடயமாய் மாறிப் பயணத்தைப் பேருந்து
மூலம் தொடர்வண்டி மூலம் ஏற்பாடு
ஊர்நோக்கிச் செல்லவைக்கும் காட்சி அரங்கேற்றம்!
ஊர்கூடித் தேரிழுக்கும் தொண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home