Thursday, June 25, 2020

சிறுபாணாற்றுப்படை!

26.06.20 மாலை 7.30 மணி

கவிஞர் பாலா இ.ஆ.ப.

அவர்களுக்கு வாழ்த்து!

முதுவோர்க்கு முகிழ்த்த கை!

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்,
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்,
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்,
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்,
நீசில மொழியா அளவை.
( அடிகள் 231-235)

சிறுபாணாற் றுப்படைப் பாடல் வரிகள்
நறுந்தமிழ்ப் பாயும் தலைப்பாக பாலா
தொடுக்கும் சிறப்பில் தமிழ்த்தாய் மகிழ்வாள்!
கொடுக்கும் தமிழ்விருந்தோ கேட்போர் செவிக்கு
நறுந்தேன் சுவைதான் இங்கு.

சீறியாழ் ஏந்தும் பாணனே! செம்பாலை
தொடுத்தேதான் பாடுக! பாடுகின்ற நேரம்
எடுத்தெடுத்தே ஐந்து பெருங்குரவர் வாழ
கொடுத்துச் சிவந்த குவித்த கைகள்
உடையவனாம் , ஏரினால் வாழ்வோர் துயரை
நிழலாய் இருந்தேதான் நீக்குகின்ற செங்கோல்
அரசுடைய வேந்தனாம்! நல்லியக் கோடன்
பெருமையைப்  பாடு புகழ்ந்தென்றே கூறும்
அருமை வரிகள் இது.

மதுரை பாபாராஜ்

Vovemayavaramban:

வாழ்த்த சொற்கள் தடுமாறும் இந்நிலையில்
கவிதையின் சிறப்பை
கவிஞரே என் சொல்வேன்!
வாழ்த்துகள் பாவாணரே!
👏👏👏👏👏👏👏👏
: 🙏
இமயம்போல் வாழ்வில் உயர்வான எண்ணம்
இதயம் பொழிவதால் வாழ்த்து மழையில்
இமயம்போல் நானும் நனைகின்றேன்! யார்தான்
இமய வரம்பனுக் கீடு?

மதுரை பாபாராஜ்






0 Comments:

Post a Comment

<< Home