முத்தொள்ளாயிரம் பாடல் ,35
கனவினுட் காண்கொடா கண்ணூங் கலந்த
நனவினுண் முன்விலக்கு நாணும்—இனவங்கம்
பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார்
செங்கோல் வடுப்படுப்பச் சென்று
புகார்நகர் வேந்தன் நாவாய்கள் கூட்டம்
புகுந்தேதான் ஆழி அலைகளுக்குள் செல்லும்
மகத்தான செங்கோல் அரசாட்சி மன்னன்!
அவன்வந்தான் என்கனவில்! கண்கள்
உடனே
இமைமூடிக் கொண்டன! வாய்ப்பை இழந்தேன்!
அரசனாம் சோழனைப் பார்த்தேனே நாட்டில்!
தவறென நாணம் தடைபோட நின்றேன்!
அலையும் விழிகளும் நாணமும் மாறி
நிலையெடுத்த கோலம் நியாயமே இல்லை!
அலைபாயும் மங்கை நிலை.
மதுரை பாபாராஜ்
கனவினுட் காண்கொடா கண்ணூங் கலந்த
நனவினுண் முன்விலக்கு நாணும்—இனவங்கம்
பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார்
செங்கோல் வடுப்படுப்பச் சென்று
புகார்நகர் வேந்தன் நாவாய்கள் கூட்டம்
புகுந்தேதான் ஆழி அலைகளுக்குள் செல்லும்
மகத்தான செங்கோல் அரசாட்சி மன்னன்!
அவன்வந்தான் என்கனவில்! கண்கள்
உடனே
இமைமூடிக் கொண்டன! வாய்ப்பை இழந்தேன்!
அரசனாம் சோழனைப் பார்த்தேனே நாட்டில்!
தவறென நாணம் தடைபோட நின்றேன்!
அலையும் விழிகளும் நாணமும் மாறி
நிலையெடுத்த கோலம் நியாயமே இல்லை!
அலைபாயும் மங்கை நிலை.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home