Thursday, June 18, 2020

இலக்கியக் காட்சி

முத்தொள்ளாயிரம் பாடல்..38

என்னெஞ்சு நாணும் நலனும் இவையெல்லாம்
மன்னன் புனனாடன் வௌவினான்—என்னே
அரவகல் அல்குலாய் ஆறிலொன் றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள்

வௌவினான்=பறித்துக் கொண்டான்: புரவலர்=அரசர்; கொடையாளி

விளைச்சலில் ஆறிலொரு பங்கு
வரியாய்
வழங்கவேண்டும் என்றால் நியாயந்தான்! சோழன்
வரம்புகளை மீறியே நெஞ்சைப் பறித்தான்!
அழகெல்லாம் கொள்ளையடித்தான்! நால்வகைப் பண்பை
அபகரித்தான் தோழி! நியாயமா? சொல்லேன்!
அரசர்க் கழகுதானா? சொல்.

மதுரை பாபாராஜ்

ஹைக்கூ
நெறியான வரியோ ஆறில் ஒருபங்கு தானே?
செறிந்தநீர் பொன்னிநாடன் செய்ததென்ன?மொத்தமாய்ப்
பறித்தானே என் அகத்தை நாணத்தை மெய்யழகை!

கே ஜி ராஜேந்திர பாபு

0 Comments:

Post a Comment

<< Home