Saturday, July 04, 2020

இலக்கியக்காட்சி!

சங்கச் சுரங்கத்தில் பாலா வழங்கிய முத்து!

03.07.20

தலைவி மகிழ்வதற்கே நல்ல பரிசைத்
தலைவன் அளிக்கிறான்! தோழி மறுத்தாள்!
தலைவியோ நீலக் கடலுக்குள் சென்று
கயலினம் கொண்டுவரும் மீனவப் பெண்தான்!
சிறுகுடிலில் வாழ்கின்றாள்! நீயந்த
ஊரில்
கொடிகட்டிச் செல்கின்ற தேரிலே செல்லும்
பெருமகன் செல்வந்தன் மைந்தன் ஆவாய்!
கருவாட்டைக் கவ்வ வருகின்ற பறவை
வராமல் இருப்பதற்கு ஓட்டுவோர் நாங்கள்!
பளபளக்கும் அன்பளிப்பு ஏனோ எமக்கு?
புலால்மணம் வீசுது தூரமாய்ச் செல்க!
கடல்விளைச்சல் கொண்டுவாழும் சின்ன வாழ்க்கை
உதவாதே உங்களுக்கு! இவ்வாழ்க்கை எங்கள்
அகத்திற்கே செம்மாப் புடைத்து.

மதுரை பாபாராஜ்






0 Comments:

Post a Comment

<< Home