Tuesday, July 21, 2020

அகதிகளின் அவலநிலை!

அமைதியாக  வாழ்ந்திருந்த சூழ்நிலைகள் எல்லாம்
அமளியாக மாறித்தான் போச்சு

உற்றாரும்  உறவினரும்
பிரிஞ்சு போன
கோலமே உருவாச்சு

சொந்த நாட்டில் வீடில்லை
உறவில்லை உரிமையில்லை
காப்பாற்ற யாருமில்லை

எந்த நாடு நோக்கித்தான்
இவ்வுலகில் போவது
எத்தனை நாளிங்கே
போராடி சாவது

போகின்றோம் போகின்றோம்
நடந்தேதான் போகின்றோம்
எந்தநாடு வரவேற்கும்
எந்தநாடு புறக்கணிக்கும்

சொந்தநாடு விரட்டுதே
அந்தநாடு மிரட்டுதே
போட்டது போட்டபடி
கெளம்பிட்டோம் விதியநம்பி

குழந்தைகள் பசியடக்கவா
பெரியவர்கள்  விழிதுடைக்கவா
நிழலிங்கே பகையாச்சு
நிம்மதியே போயாச்சு

போகின்றோம் போகின்றோம்
அகதிகளாய்
நாடுவிட்டு நாடுபோறோம்
நிர்க்கதியாய்

விமானத்தைப் பார்த்து
மகிழ்கின்ற குழந்தைகள்
விமானத்தைப் பார்த்தாலே
பயந்தோடிப் போகிறதே

கூட்டமாகப் போகின்றோம்
கூடிழந்து போகின்றோம்
வாட்டமாகப் போகின்றோம்
வாழ்விழந்து போகின்றோம்

மதுரை பாபாராஜ்

Kardirector: Nice baba naina ... When u wrote this
Madurai Babaraj: Just now
[7/21, 12:54 PM] Madurai Babaraj: Your inspiration
[7/21, 12:54 PM] Kardirector: Great... 🙏

0 Comments:

Post a Comment

<< Home