உறவுகள் இன்று
உறவுகள் இன்று!
இன்றைய நடப்பு
உறவுப் பறவை சிறகை விரி்த்துப்
பறந்து பறந்தே உயர்ந்த பொழுதில்
சிறகின் இயக்கமோ நிற்க, விழுந்தப்
பறவையோ அந்த இடத்திலே கூட்டைப்
படைத்தது வாழத் துடித்து.
இப்படித்தான் எந்தெந்த நாட்டிலோ எங்கெங்கோ
சுற்றமும் நட்பும் சிதறித்தான் வாழ்கின்றார்!
எப்படியும் பார்ப்போமா வாழ்க்கை முடிவதற்குள்?
இப்படித்தான் நம்புகிறோம் நாம்.
முகதூல் புலனம் இணையதளம் என்றே
வகைவகை யாக தொழில்நுட்பக் கூட்டில்
கலந்தே நிழலை உறவாடி வாழும்
நிலையிலே வாழ்கிறோம் பார்.
சொந்தநாட்டை விட்டுவிட்டே எந்தநாடோ சொந்தமாக
நம்முறவை நாம்துறந்தே அவ்வுறவை நாமேற்க
வந்தவாழ்க்கை வானத்தில் நாம்பறந்தே வாழ்கின்றோம்!
சொந்தபந்தம் கானலாகிப் போச்சு.
மதுரை பாபாராஜ்
Vovgopalpalanimuthu:
நடப்புநிலைமையை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். அப்பா அம்மாக்கள் தவிப்பு.
0 Comments:
Post a Comment
<< Home