Wednesday, October 14, 2020

வசந்தா பாபாராஜ் பொழுது போக்கு

 மனைவியின் பொழுது போக்கு காலையிலும் மாலையிலும்!


காலை வலையொளி( YouTube)!


வலையொளி பார்த்து வகைவகை யாக

சமையலைக் கற்றே உணவு வகையைச்

சமைப்பதற்கு கேட்பார்கள் கைபேசி மூலம்!

சமைப்பார் அடுத்தநாள்  சாப்பிட வேண்டும்!

அலுக்காமல் பார்த்திருப்பேன் நான்.


மாலை தொலைக்காட்சி!


பக்தி ரசம்சொட்டும் பாடல்களைக் கேட்பதற்கே

அக்கறையாய்  இந்தத் தொலைக்காட்சி

இல்லையெனில்

பக்தியுடன் அந்தத் தொலைக்காட்சி ஊர்வலம்!

எப்படியும் பார்ப்பார் தொலைநிலையைத் தூண்டித்தான்!

இப்படித்தான் போகும் பொழுது.



தொலைநிலை: REMOTE


மதுரை பாபாராஜ்







0 Comments:

Post a Comment

<< Home