பாலாவின் சங்கச்சுரங்கம் 10.10.20
பாலாவின் சங்கச்சுரங்கம்
10.10.20. சனி மாலை 6.30
இணையப் பத்து இரண்டாம் பத்து
ஒன்பதாம் உரை
தலைப்பு: பண்பு இல் ஆண்மை
திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
புறம் 344
சங்க இலக்கியக் காட்சிகளைப் பல்வேறு
பன்முகக் கோணத்தில் கண்முன்னே கொண்டுவந்தே
அற்புதமாய்க் காட்டிய பாலாவின் ஆற்றலை
நற்றமிழால் வாழ்த்தவேண்டும் இங்கு.
குறள் 996:
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்னென்ற வள்ளுவரின்
பண்பாளர் மேன்மையினைச் சொல்லி
விளக்கினார்!
பண்பிற்கு வள்ளுவமே வேர்.
மகாத்மா காந்தியின் பொன்மொழி:
பண்பாடு என்பது மக்கள் இதயத்தில்
அன்றாடம் ஓடும் உயிரோட்ட மாகுமென்ற
அண்ணல் மகாத்மாவின் பொன்மொழியைக் கூறினார்!
பண்பட்டோர் வாக்கே அது.
பண்பாடு என்ற பனிப்பாறை:
புலனாகாதவை/ புலப்படுபவை
எண்ணங்கள் அவ்வெண்ணம் தூண்டும் உணர்ச்சிகள்!
இந்த இரண்டும் செயலின் நடத்தைகள்
அந்த நடத்தைகள் காட்டும் விளைவுகள்!
பண்பாடு என்ற பனிப்பாறைக் கொண்டிருக்கும்
உட்கூறென் றேசொன்னார் கேள்.
இலக்கிய எடுத்துக்காட்டுகள்:
நற்றிணை மற்றும் கலித்தொகைக் காட்சிகள்
அற்புத மான புறத்தில் இழையோடும்
பெண்கள் மனநிலை, பெற்றோர் மனநிலை
பொன்பொருள் என்றே மயங்காமல் பெண்மணியைப்
பெண்ணாய் மதிப்பவர்க்கே தந்து தலைநிமிரும்
பண்பாட்டைச் சொன்னவரை வாழ்த்து.
சங்கச் சுரங்கத்தில் கண்டெடுத்த முத்துகளை
அங்கே அரங்கத்தில் கோர்த்துவைத்த மாலையாக
தந்தார்! அனைவரும் வாழ்த்தினார் கேட்டறிந்தார்!
பண்பாளர் பாலாவை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home