நீர் உயிரின் வேர் நூல்வெளியீடு
நூல் வெளியீட்டு விழா
நூல்:நீர் உயிரின் வேர்
நூலாசிரியர்
திரு.அமிர்தம் பீட்டர் ராஜன்
நாள். 10.10.20
வெளியீடு: சான்றோர்தளம்
நீரின் றமையா துலகென்றார் வள்ளுவர்!
வேர்போன்று வாழ்வின் உயிரோட்டம் நிற்கின்ற
நீரின் அவசியத்தை நூலாக்கித் தந்துள்ள
பீட்டரின் ஆற்றலை வாழ்த்து.
அனைவரது பேச்சும் அருமை! உலகில்
மனைதோறும் தாக்கத்தை ஏற்படுத்தும் நீரின்
வினையாற்றல் மகத்தான தென்றே கூறி
மனிதன் விழிப்புணர்வு கொள்ளாமல் வாழ்ந்தால்
இனமே அழிவினைச் சந்திக்கும் என்றே
அனைவரும் எச்சரித்தார் நன்கு.
நூலாசிரியர்
சுற்றுப் புறச்சூழல் ஆர்வத்தின் தாக்கமே
இத்தகைய நூலெழுதக் காரணம் என்றேதான்
நண்பர் விளக்கினார்! உள்ளக் கிடக்கையின்
பண்பட்ட பக்குவத்தைப் பார்
திருக்குறள் தொட்டு தொல்காப் பியத்தில்
வருவதைக் கூறி அருமையாய்ப் பேசி
அடுத்த தலைமுறைமேல் அக்கறை தன்னை
எடுத்துரைத்த நண்பரை வாழ்த்து.
திருமதி பீட்டர் ராஜனின் நன்றியுரை!
நல்லா சிரியராம் இல்லத் தரசியோ
சங்க இலக்கியத்தில் மன்னருக்குப் பாவலர்கள்
எங்கெங்கே நீரின் அவசியத்தைக் கூறினார்கள்
என்றே விளக்கியதை நாமறிதல் தேவைதான்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
[10/12, 9:19 AM] ThamizhiyalanPeter:
ஆன்ற தமிழ் அறிஞரின்,அன்பு நிறை வாழ்த்துகளுக்கு நன்றி.🙏🏽
0 Comments:
Post a Comment
<< Home