சாயா சித்தியின் நினைவில்
மலரும் நினைவுகள்
காலணா கடன்காரன்!
தியாக விளக்கு
சாயா சித்தியின் நினைவில்!
புட்டுத்தோப்பு, மதுரை பள்ளிஆசிரியை
1955--1957
சாவித்திரி சித்தி புட்டுத்தோப் புப்பள்ளி
ஆசிரியை யாகப் பணிபுரிந்த நாள்களில்
ஆசையுடன் நான்சென்றே காலணா கேட்டதுண்டு!
பாசமுடன் காலணா தந்தே மகிழ்ந்திருந்தார்!
கூடப் பணிபுரிந்தோர் நான்போய் நின்றவுடன்
காலணா வாங்கும் கடன்காரன் என்றேதான்
சூட்டினார் பட்டம் உவந்து.
அக்கா வுடன்சேர்ந்து கேப்ரன்ஹால் பள்ளிக்கு
நித்தம் நடந்துசெல்வோம்! போகும் வழியிலே
சித்தியைப் பள்ளியில் பார்க்கும் பழக்கமுண்டு!
அப்படியே காலணா வாங்குவேன் மிட்டாய்க்கு!
இப்படித்தான் காலணா வாங்கும் கடன்காரன்
பட்டத்தைத் தந்தார் எனக்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home