Saturday, October 10, 2020

எனக்கு அகவை 72/73

 இன்று எனக்கு அகவை 72/73


11.10.2020


தாய்தந்தை ஆசிகளும்  உற்றார் உறவினர்கள்

வாழ்த்துகளும் நான்பெற்ற பேறு.


எழுபத் திரண்டை நிறைவுசெய்தேன் இன்றோ

எழுபத்து மூன்றில் அடியெடுத்து வைத்தேன்!

உலகத்தில் இல்லறம் ஏற்றேன் ! குடும்ப

உவகையில் பேரன்கள் பேத்திகள் மற்றும்

வளரும் உறவுகள் சூழத்தான் வாழும்

அழகுடன் வாழ்கிறேன் இங்கு.


இலக்கிய வீதியில் நாளும் பயணம்

வளர்கிறது ஊக்குவிக்கும் நண்பர்கள் வாழ்த்த

தளர்வின்றி நாளும் திருக்குறள் கற்றே

இலக்கியத் தேனைச் சுவைக்கின்றேன் இங்கு.

உளங்கனிந்த வாழ்த்தே உயர்வு.



ஆசிகளையும் வாழ்த்துகளையும் நாடும்

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home