அருமை மகன் அரவிந் பிறந்தநாள்
அருமை மகன் அரவிந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்து.
பெற்றோர்:
திருமதி கலாவதி -- மணிவண்ணன்
அக்கா: மோனிசா ராகவி
11.10.20
கற்றுத் தெளிந்தே படிப்படியாய் முன்னேறி
சற்றும் சளைக்காமல் கல்லூரி வாழ்க்கையை
அற்புதமாய் ஏற்றே படித்து வளர்கின்றார்!
எத்துறை என்றாலும் ஆர்வமுடன் கற்கின்ற
அக்கறை உள்ளதை வாழ்த்து.
கணினித் துறையிலே பல்கலை கற்றே
பணிவும் அடக்கமும் கொண்டே உழைக்கும்
தனிப்பண்பு கொண்டதால் முன்னேற்றம் உண்டு!
தமிழ்போல வாழ்கபல் லாண்டு.
பெற்றோர் உறவினர் ஆசியுடன் நண்பர்கள்
சுற்றத்தார் வாழ்த்துடன் பல்வளங்கள் சூழ்ந்திருக்க
எப்பொழுதும் இன்பமுடன் வாழ்வாங்கு வாழியவே!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
பாபா பெரியப்பா
வசந்தா பெரியம்மா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home