படைப்புகளுக்கு இமயத்தின் வாழ்த்து
கவிச்சாரலில் நனைந்து
மரபுகளின் அருவியில்
குளித்து
அற்புதத்தரு நிழலில்
மகிழம்பூ மணத்தை
பூச்சரமாய் தொடுத்து
மகரயாழ் இசையில்
மகரவிளக்கு வெளிச்சத்தில்
வசந்தத்தின் மடியில்
திருக்குறள் பேழையில்
அறம் பொருள் இன்பம்
வெண்பா கவியாய்
கவியமுதம் ஊட்டும்
வெண்பாக் கவியை
வாழ்க! வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் நெஞ்சத்தால்!
போற்றி போற்றியென்று
போற்றுகின்றேன் நெஞ்சினிக்க!
0 Comments:
Post a Comment
<< Home