Monday, November 09, 2020

பாசிப்பயறு உருண்டை

 தீபாவளி இனிப்பு


பாசிப்பயறு உருண்டை!


பாசிப் பயறை வறுத்தே அரைத்தேதான்

கூடவே சர்க்கரை சேர்த்துக் கலந்தேதான்

வாகாக முந்திரி திராட்சை வறுத்தேதான்

மாவுடன் சேர்த்தே உருண்டை பிடித்துவிட்டால்

பாசிப் பயறுருண்டை தன்னைச் சுவைக்கலாம்!

நாடி நடனமாடும் நா.


ஆர்வக்கோ ளாறிலோ அப்படியே வாய்க்குள்ளே

போட்டுவிட்டால் ஒட்டி உறவாடும்! வாய்திறக்க

மாட்டாமல் திக்கி்த் திணறுகின்ற காட்சியைப்

பார்க்க நகைச்சுவை தான்.


மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home