Monday, November 09, 2020

பழைய நினைவுகள்

 அய்யா எசக்கிராஜன் அனுப்பிய படங்கள்!


பழைய நினைவுகள் 


அம்மிக்கல்!


வகைவகை யான சட்னி துவையல் 

வகைவகை யான மசாலா  அரைக்க பொடிவகைகள் எல்லாம் அரைத்து அரைத்து

சுவைசேர்க்க அம்மிக்கல் வைத்திருந்தோம் அன்று!

இவையும் வழக்கொழிந்து போச்சு


ஆட்டுக்கல்!


தோசைக்கும்  இட்லிக்கும் ஆப்பம் பணியாரம்

ஆசை வடைவகை மற்றும் அடைமாவு

கோலா உருண்டைகள் போன்றவை ஆட்டுக்கல்

பார்த்தமர்ந்து கட்டை பிடித்தேதான் ஆட்டுவார்!

வேர்த்து விறுவிறுக்கத் தான்.


உரல்உலக்கை!


அதிரச மாவிடிக்க நெல்லிடிக்க மற்றும்

அவலிடிக்க கம்புடன் கேழ்வரகு சோளம்

இடித்துக் களிகிண்டுதல் சாதமாக்குதல் எல்லாம் 

உரலுலக்கை தன்னைப் பயன்படுத்தி செய்திடுவார்!

உலக்கைப்பாட் டுகட்டியே பாடுவார் அன்று!

வழக்கொழிந்து போச்சேதான் இன்று.


திருகைக்கல்!


கீழே நிலையான கல்லிருக்க காதுடன்

மேலே அசைகின்ற வட்ட வடிவக்கல் !

காதைப் பிடித்தேதான் சுற்றிப் பொருள்களைப்

போட்டே அரைப்போம் மகிழ்ந்து.


உடற்பயிற்சிக் கூடமெல்லாம் தோற்க இவைகள்

உடலுக்குத் தேவையான நல்ல பயிற்சி

இயற்கையாய் வாராது வந்த மணியாய்

உழைக்கின்ற வாய்ப்பும் சேர்ந்து கிடைத்த

நிலைமாறிப் போச்சே விளம்பு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home