Tuesday, December 08, 2020

17.அழுக்காறாமை

 குறள்களுக்குக்  குறள்வடிவில் கருத்து

17.அழுக்காறாமை


குறள் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்

தழுக்கா றிலாத இயல்பென்றார் அய்யன்!

அழுக்காறை உள்ளத்தில் ஏற்காத பண்பாம்

ஒழுக்க நெறிகளைப் போற்று.

குறள் 162:

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறினென்றார் அய்யன்!

ஒருவ  ரிடமும் பொறாமையற்ற பண்பே

பெருமைக் குரியநற் பேறு.

குறள் 163:

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணா தழுக்கறுப் பானென்றார் அய்யன்!

அறநெறிச் செல்வத்தை வேண்டாதான் இங்கே

பொறாமை அடைவான் தகித்து.

குறள் 164:

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக் கறிந்தென்றார் அய்யன்!

நெறிபிறழ்ந்தால் துன்பம் வருமென் றறிந்தோர்

பொறாமைச் செயல்தவிர்ப்பார் கூறு.

குறள் 165:

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்

வழுக்கியுங் கேடீன் பதென்றார் அய்யன்.

பொறாமை படைத்தோர்க்கு வேறுபகை உண்டோ?

பொறாமையே வீழ்த்தும் உணர்.

குறள் 166:

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉ மின்றிக் கெடுமென்றார் அய்யன்!

கொடுப்பதைப் பார்த்துப் பொறுக்காதோர்  சுற்றம்

உடையுண வின்றிக் கெடும்.

குறள் 167:

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடுமென்றார் வள்ளுவர்!

உள்ளம் பொறாமை வசப்பட்டால் செல்வமோ

ஏழ்மைக்கு வாய்ப்பளிக்கும் சொல்.

குறள் 168:

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடுமென்றார் அய்யன்!

பொறாமையோ செல்வத்தைச் சீரழித்தும் தீய

நெறியிலும் விட்டுவிடும் சொல்.

குறள் 169:

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படுமென்றார் வள்ளுவர்!

முற்றும் பொறாமைதான்! வாழ்க்கை வளமுடன்!

சற்றும் பொறாமையில்லை! வாழ்க்கை வறுமைதான்!

இப்படி வாழ்க்கை முரண்.

குறள் 170:

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்லென்றார் அய்யன்!

பொறாமைக் குணத்தோர் உயர்ந்ததில்லை!  வாழ்வில்

பொறாமையற்றோர் தாழ்ந்ததில்லை சாற்று.
















 



















0 Comments:

Post a Comment

<< Home