18.வெஃகாமை
குறளுக்குக் குறள்வடிவில் கருத்து
18.வெஃகாமை
குறள் 171:
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தருமென்றார் அய்யன்!
பிறரின் பொருளைக் கவர்ந்தால் குடும்பம்
அழியும்! பெருகிவரும் தீது.
குறள் 172:
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவரென்றார் அய்யன்!
கவர்தல் பழிச்செயல் என்றேதான் அஞ்சித்
தவிர்ப்பார் நீதிமான் இங்கு.
குறள் 173:
சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவரென்றார் வள்ளுவர்!
இன்பம் கிடைக்கிற( து) என்றே அறம்பிறழ்ந்து
பண்புள்ளோர் ஏற்கமாட்டார் கூறு.
குறள் 174:
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவரென்றார் அய்யன்!
புலனடக்கம் கொண்டோர் வறுமையில் கூட
பிறர்பொருள் நாடமாட்டார் கூறு.
குறள் 175:
அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின் வள்ளுவர்!
மற்றவர்க் குள்ள பொருளைப் பகுத்தறிவு
பெற்றோர் கவரமாட்டார் கூறு.
குறள் 176:
அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடுமென்றார் அய்யன்!
அருள்நாடும் இல்லறத்தான் மாற்றான் பொருளைக்
கவர்ந்தால் அழிந்திடுவான் காண்.
குறள் 177:
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயனென்றார் வள்ளுவர்!
மாற்றார் பொருளைக் கவர்ந்து வளம்பெற்றால்
அப்பயன் தீமை தரும்.
குறள் 178:
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருளென்றார் வள்ளுவர்!
தன்செல்வம் குன்றா திருக்கப் பிறர்பொருளை
என்றும் கவராமல் வாழ்.
குறள் 179:
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திருவென்றார் அய்யன்!
பிறர்பொருள்மேல் ஆசையற்ற பண்பே அறமாம்!
அவர்நாடி செல்வம் வரும்.
குறள் 180:
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கஎன்றார் அய்யன்!
பிறர்பொருள் ஆசை அழிவு! ஆசை
புறக்கணித்துச் சேர்த்தால் வளம்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home