Thursday, December 31, 2020

50 இடனறிதல்

 குறள்களுக்குக்  குறள்வடிவில் கருத்து

50 இடனறிதல்.

குறள் 491:

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்னல் லது.


பகைவரை அற்பமென்றே எண்ணாமல்

தாக்கும்

இடத்தில் செயல்பட்டே தாக்கு.

குறள் 492:

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவுந் தரும்.


வலிமை இருந்தும் அரணும் இருந்தால்

பயனுடன்  வெற்றியுண்டு செப்பு.

குறள் 493:

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.


தக்க இடத்தைத் தெரிவுசெய்து, தற்காத்தே

அக்கறையாய்த் தாக்கும்  வலிமையற்ற

வேந்தருக்கும்

வெற்றி கிடைக்கும் உணர்.

குறள் 494:

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.


தக்க இடமறிந்து தாக்கினால் நம்பகைவர்

வெற்றி பெறுதல் அரிது.

குறள் 495:

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.


முதலைக்கு நீருக்குள் வெற்றி! தரையில்

முதலைக்குத் தோல்வி! உணர்.

குறள் 496:

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.


கடலுக்குள்  ஓடாது சக்கரத் தேர்தான்!

படகோ நிலத்திலே செல்லாது! மாந்தர்

இடமறிந்தால் சாதிக்க லாம்.

குறள் 497:

அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி யிடத்தாற் செயின்.


அஞ்சாமல், செய்யும் செயலை இடனறிந்து

எண்ணியே செய்யவேண்டும் செப்பு.

குறள் 498:

சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்.


சின்னப் படையெனினும் தக்கஇடம் தேர்ந்தெடுத்தால்

அஞ்சும்  பெரும்படை பார்த்து.

குறள் 499:

சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோ டொட்ட லரிது.


அரண்வலி இல்லை! படைவலி இல்லை!

அவரிருக்கும் வாழ்விடத்தில் தாக்குதல்

செய்தால்

எளிதல்ல வெற்றியென்று செப்பு.

குறள் 500:

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு.


வேலெறியும் வீரரைக் கொன்றயானை சேற்றிலே 

வீழ்ந்துவிட்டால்  குள்ளநரி கொன்றுவிடும்! யானைக்கும்

சூழ்நிலை மாறினால் கேடு.







































0 Comments:

Post a Comment

<< Home