Sunday, January 31, 2021

118 கண் விதுப்பழிதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

118 கண் விதுப்பழிதல்

( கண் கலங்கி வருந்துதல்)

குறள் 1171:

கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

தாங்காட்ட யாங்கண் டது.


காதலரைக் காட்டியே துன்பத்தைத் தந்துவிட்டு

வேதனையில் கண்கள் அழுவதேன் இப்போது?

சோதனைமேல் சோதனை தான்.

குறள் 1172:

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்

பைதல் உழப்ப தெவன்.


அன்று மயங்கிய கண்கள் தவிப்பதேன்

இன்று பிரிவை நினைந்து.?

குறள் 1173:

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்க துடைத்து.


அன்பரைப் பார்த்துத் துள்ளிய கண்களோ 

இன்று பிரிவில் துவள்வதைக் கண்டால் என்னுள்ளே தோன்றும் சிரிப்பு.

குறள் 1174:

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா

உய்வில்நோய் என்கண் நிறுத்து.


காதலின் துன்பத்தை எனக்களித்து கண்களோ

நீர்வறண்டு வாடுவதைப் பார்.

குறள் 1175:

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்

காமநோய் செய்தவென் கண்.


கடலளவு துன்பத்தைத் தந்துவிட்டே தூக்கம்

இழந்தே தவிக்கிறது கண்.

குறள் 1176:

ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்

தாஅம் இதற்பட் டது.


கண்கள் எனக்களித்த துன்பத்தைத் தானுமிங்கே

நன்கு படுவதும் நன்று.

குறள் 1177:

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து

வேண்டி அவர்க்கண்ட கண்.


அன்பரைப் பார்த்தேதான் துள்ளிய கண்களே!

துன்பத்தில் தூக்கமின்றிக் கண்ணீரும் வற்றட்டும்

இன்று பிரிவேக்கத் தால்.

குறள் 1178:

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்

காணா தமைவில கண்.


உள்ளம் விரும்பாமல் சொல்லால் விரும்புகின்றார்!

துள்ளுதே பார்ப்பதற்குக் கண்.

குறள் 1179:

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்.


அன்பர் வரவில்லை! கண்களோ தூங்கவில்லை!

வந்தால் பிரிவாரோ என்றெண்ணித் தூங்கவில்லை!

துன்பமெல்லாம் கண்களுக்குத் தான்.

குறள் 1180:

மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல்

அறைபறை கண்ணார் அகத்து.


பறையறைந்து சொல்லிவிடக் கண்கள் இருக்க

மறைப்பதேது ஊரா ரிடம்?

























0 Comments:

Post a Comment

<< Home