Sunday, January 31, 2021

116 பிரிவாற்றாமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

116. பிரிவு ஆற்றாமை

(பிரிவிற்காக வருந்துதல்)

குறள் 1151:

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை


பிரிந்துசென்றால் என்னிடம் சொல்லாதே! நீயோ

திரும்பி வரும்போது யாரிருப்பார் இங்கே?

அவரிடம் சொல்லிவிட்டுச் செல்.

குறள் 1152:

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு.

அவருடைய பார்வை மகிழ்ச்சிதான்! ஆனால்

அவர்பிரிவோ அஞ்சவைக்கும் சாற்று.

குறள் 1153:

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்.


பிரிவுத் துயரறிந்தும் செல்லமுற் பட்டால்

அவரன்பை என்னசொல்ல நான்?

குறள் 1154:

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க் குண்டோ தவறு.


பிரியமாட்டேன்! தேற்றினார்! நம்பினேன் நான்தான்!

அதுதானோ என்தவறு சொல்?

குறள் 1155:

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.


என்னுயிரைக் காக்க பிரிவைத் தவிர்க்கவேண்டும்!

சென்றாலோ கூடல் அரிது.

குறள் 1156:

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை.


பிரிவுரைக்கும் கல்நெஞ்சர் வந்துமீண்டும் அன்பில்

திளைக்கவைப்பார் என்பது வீண்.

குறள் 1157:

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.


என்னைத் தலைவன்  பிரிவதை வளையல்கள்

முன்கழன்றே சொல்கிறதோ இங்கு?

குறள் 1158:

இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்

இன்னா தினியார்ப் பிரிவு.


உறவற்றோர் ஊர்வாழ்தல் துன்பம்! தலைவன்

பிரிவோ உறுத்துகின்ற முள்.

குறள் 1159:

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.


நெருப்பினைத் தொட்டால் சுடுகிறது! காதல்

பிரிவில் சுடுகிறதேன் சொல்?

குறள் 1160:

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர்.


தலைவன் பிரிவைப் பொறுத்துவாழ்வோர் உண்டு!

அலையில் துரும்பானேன் நான்!





























0 Comments:

Post a Comment

<< Home