Thursday, January 28, 2021

112 நலம்புனைத்துரைத்தல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

112 நலம்புனைந்துரைத்தல்

( தலைவியின் அழகைத் தலைவன் பாராட்டுதல்)

குறள் 1111:

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்.


அனிச்சமே! நீயென்றும் மென்மைதான்! ஆனால்

தலைவிமுன் உன்மென்மை தூசு.

குறள் 1112:

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று.


மலர்கண்டு தள்ளாடும் நெஞ்சே! தலைவி

விழிகளே மற்றவர் பார்த்து மயங்கும் மலர்களென்று பார்க்கின்றா யோ?

குறள் 1113:

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.


மாமை நிறமேனி,முத்தொளிப் பற்களுடன்

மூங்கிலன்ன தோள்கள், நறுமணம், வேல்வழி

ஏந்திவரும் ஏந்திழையாள்  தான்.

குறள் 1114:

காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.


குவளைமலர் காதலியின் கண்களைக் கண்டால்

இவள்கண்கள் போலத்தான் நாமில்லை என்றே

நிலம்நோக்கி வெட்கப் படும்.

குறள் 1115:

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை


அனிச்சம் பூக்காம்மை நீக்காமல் மாது

தலையிலே வைத்தாள் இடையொடிந்து வீழ

பறையொலி மங்கலம் போச்சு!

குறள் 1116:

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன்.


மங்கை முகத்திற்கும் அந்த நிலவிற்கும்

விண்மீன்கள் வேறுபாடு காணாமல் தத்தளித்தே

அங்குமிங்கும் பாய்கிறது பார்.

குறள் 1117:

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.


நிலவில் தெரியும் களங்கம் தலைவி

முகத்திலுண்டோ? பார்த்துச் சொல்.

குறள் 1118:

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி.


என்காதல் வேண்டுமா? மாதின் முகம்போல

வெண்ணிலவே! தண்ணொளி வீசு.

குறள் 1119:

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி.


மாதரசி என்னவளின் பால்முகத்தை ஒத்திருந்தால்

பாரறிய வெண்ணிலவே தோன்று.

குறள் 1120:


அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.


அனிச்சம்பூ, அன்னச் சிறகுகளின் மென்மை

மனவியின் காலடி மென்மைக்கு முள்ளாம்,

நெருஞ்சிக் கிணையாம் செப்பு.


மதுரை பாபாராஜ்






















0 Comments:

Post a Comment

<< Home