Wednesday, January 27, 2021

109 தகையணங்குறுத்தல்


இன்பத்துப்பால் தொடக்கம்

குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து



109 தகையணங்குறுத்தல்

( தலைவியின் அழகைத் தலைவன் தனக்குள் சொல்தல்)

குறள் 1081:

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.


அழகோ! கலைமயிலோ? காதில்

குழைகள்

அசைகின்ற மங்கையோ? நெஞ்சம் மயங்கி

மலைக்கிறதே கண்ணாரக் கண்டு.

குறள் 1082:

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து.


நோக்கினாள்! நோக்கினேன்! நோக்கினாள்! சேனையுடன்

தாக்கவந்த கோலம்போல் தான்.

குறள் 1083:

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு.


கூற்றுவனைப் பார்த்ததில்லை! பெண்வடிவில் வேல்விழிகள்

ஏந்தியதைப் பார்த்தறிந்தேன் நான்.

குறள் 1084:

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக் கமர்த்தன கண்.


பெண்ணின் இயல்புக்கு மாறாக கண்களோ

இன்னுயிரைத் தாக்குவதேன் கூறு.

குறள் 1085:

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து


கூற்றமோ? கண்களோ ?பெண்மானோ?

கேள்விமூன்றைக்

கேட்கிறதே பெண்பார்வை பார்த்து.

குறள் 1086:

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்னிவள் கண்.


கொடும்புருவம்  நேராய் இருந்தால் நடுக்கிப்

படுத்தாதே துன்பத்தில் கண்.

குறள் 1087:

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்.


தேன்மகள் மார்பகம்மேல் ஆடை, மதம்பிடித்த

யானை முகப்படாம் போல்.

குறள் 1088:

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு.


போர்ப்பகையை அச்சுறுத்தும் ஆற்றலோ

தோற்றதே

தேரழகி நெற்றிக்கு முன்.

குறள் 1089:

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்

கணியெவனோ ஏதில தந்து.


பெண்மானின் பார்வையுடன் நாணம் இயற்கையணி

இங்கிருக்கப் பொன்னணிகள் ஏன்?

குறள் 1090:

உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.


உண்டால் மயக்கம் கொடுப்பது கள்தான்!

கண்டால் மயக்கும்பெண் அன்பு.































0 Comments:

Post a Comment

<< Home