Wednesday, January 27, 2021

பத்மஸ்ரீ _வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம்_


 நன்றி:

பத்மஸ்ரீ  _வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம்_



கூறும் பால் கதை:

கவிதை ஆக்கம் 

*ஆழாக்கு பாலைப்போல் என்னை

ஆளாக்கு ஆண்டவனே*    

🌼பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!


பசுவிற்குள் வாழ்ந்தேன்! கறந்தார்! கலத்தில்!

அடுப்பிலே வைத்தேதான் சூடாக்கி னார்கள்!

துடித்தேதான் பொங்கினேன்! என்னை இறக்கி

இணைத்தார் புளித்தமோர்!மூடினார் என்னை!

திரவம் திடமானேன்! நான்தான் தயிராம்!

கடைந்தார்கள் மத்துவைத்து! மோரானேன் நான்தான்!

திடமெடுத்து வெண்ணெய் என்றார்கள்! மீண்டும்

அடுப்பில் உருக்கினர் நெய்யென்றார் தொந்தேன்!

உருக்கிய நெய்யை ஜாடியில் ஊற்றி

தெருவோர ஜன்னலில் வைத்தனர் மக்கள்

இருபது ரூபாய்ப் பாலிங்கே மாறி

உருகிய நெய்யாய் இருநூறு ரூபா

செருக்குடன் விற்கின்றார் என்றேதான் சொன்னார்!

பாலாக உள்ளவரை என்மதிப்பும் இன்னலை

மாறிமாறி ஏற்று முடிந்ததும் என்மதிப்பும்

மாறி உயர்ந்ததை நானுணர்ந்தேன் நன்றாக! 

மாறியது வாழ்க்கை மதிப்பு.


மதுரை பாபாராஜ்




 


0 Comments:

Post a Comment

<< Home